புதுதில்லி:
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் பகாசூர சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் 50 மொத்த விற்பனை நிலையங்களை (சூப்பர் மார்க்கெட்) தொடங்கத் திட்டமிட்டுள்ளது.அண்மையில்தான் இந்த நிறுவனம், இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் வர்த்தகத் தளமான ‘பிளிப்கார்ட்’டை விலைக்கு வாங்கி தன்வசம் கொண்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் 50 சூப்பர் மார்க்கெட்டுகளை திறக்கப் போவதாக கூறியுள்ளது.

‘இந்தியாவில் மொத்த விற்பனை நிலையங்களை அதிகரிக்கும் பணியில் வால்மார்ட் ஈடுபட்டுள்ளது; இரண்டு மொத்த விற்பனை நிலையங்கள் இந்த ஆண்டிலும், எட்டு மொத்த விற்பனை நிலையங்கள் அடுத்த ஆண்டிலும், அதற்கடுத்த ஆண்டில் 10 மொத்த விற்பனை நிலையங்களும் தொடங்கப்படும்; ஒட்டுமொத்தமாக அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 50 மொத்த விற்பனை நிலையங்களை வால்மார்ட் தொடங்கத் திட்டமிட்டுள்ளது; இதில் உத்தரப் பிரதேசத்தில் 15 நிலையங்களை அமைக்க அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்’ என்று வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவரான கிரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.                                                                                      கிரிஷ் ஐயர்

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர், முரதாபாத், வாரணாசி, கோரக்பூர், ஷரன்பூர், லக்னோ, காசியாபாத் ஆகிய இடங்களில் ஏற்கெனவே விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இவை ‘பெஸ்ட் பிரைஸ்’ என்ற பெயரில் இயங்கி வருகின்றன. இதே பெயரில் மட்டும் இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் மொத்தம் 21 சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களை வால்மார்ட் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.