சென்னை
‘வெயிட்டேஜ்’ இல்லை!
அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகத் தகுதி பெற ஆசிரியர் தகுதித் தேர்வுடன், வெயிட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை யில், வெயிட்டேஜ் முறை கைவிடப்பட்டு அதற்குப் பதிலாகப் போட்டித் தேர்வு நடத்தி ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு
மிக நீளமான கிரகணம்!
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் வரும் ஜூலை 27-ம் தேதி தென்படவுள்ளது. இது 1 மணி 45 நிமிடங்கள் வரை தென்படும் எனக்
கூறப்பட்டுள்ளது. வரும் ஜுலை 27-ம் தேதி இரவு 11:44 மணிக்கு இந்தியாவில் சந்திரகிரகணம் தென்படும்.

சென்னை
‘ரெய்டில் ஈடுபடமாட்டோம்’
பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வருமான வரித்துறை சோதனைகளில் ஈடுபட மாட்டோம் என அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வருமான வரித்துறை நாளான ஜூலை 24 (செவ்வாய்) புறக்கணித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.

புதுதில்லி
ஓபிஎஸ் பயணம் ஏன்?
செவ்வாயன்று தில்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் ‘தில்லி பயணத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானம் வழங்கி யதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாக கூறினார். ஆனால், நிர்மலா, அவரை சந்திக்க மறுத்துவிட்டார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி
தற்காலிகமாக மூடப்பட்டது
காவிரியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் திருச்சியின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட பகுதி
களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிக மாக இருக்கிறது. அதனால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு சுற்றுலா மையத்தை தற்காலிகமாக மூடுவ தாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுதில்லி
‘இந்தியா மிக அருமை’
பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அஸ்பக் அலி கடந்த ஆண்டு சர்வதேச எல்லையைத் தாண்டிய குற்றத்துக் காக கைது செய்யப்பட்டார். 14 மாதங் களாக சிறையில் இருந்தவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் “எனக்கு திரும்பிச் செல்ல விருப்பமில்லை. இந்தியா மிகவும் அருமையாக உள்ளது’’ என அச்சிறுவன் கூறியுள்ளார்.

வேளாங்கண்ணி
சிறப்பு ரயில் இயங்குமா?
வேளாங்கண்ணி கோயில் திருவிழா வுக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது.

பூரி
மதம் எங்கோ போனது!
ஒடிசாவில் பூரி ஜெகநாதர் ஆலயத் திருவிழா மிகவும் பிரபலம். இத்திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொள்வர். இந்த ஆண்டுக்கான திருவிழா பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமிய இளைஞர்களும் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரம்
மோகன்லாலுக்கு எதிர்ப்பு
பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பை மீண்டும் மலையாள நடிகர் சங்க த்தில் சேர்த்த மோகன்லாலை, மலையாள சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கக்கூடாது என நடிகர்கள் மனு அளித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.