திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் என அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 தொடரின் 3-வது சீசன் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் (நத்தம்) ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.திருச்சி – கோவை அணிகள் மோதிய 13-வது லீக் ஆட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.பி.ஆர் கல்லூரியில் திங்களன்று இரவு 7:15 மணிக்குத் தொடங்கியது.

‘டாஸ்’ வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. திருச்சி அணியில் அதிகபட்சமாக சுரேஷ்குமார் 35 ரன்கள் எடுத்தார்.கோவை அணி தரப்பில் அதிகபட்சமாக அஜித்,மணிகண்டன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய கோவை அணி,தொடக்க வீரர்களான கேப்டன் அபினவ் முகுந்த் (42 ரன்கள்), ஷாருக்கான்(67 ரன்கள்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.ஆட்டநாயனாக கோவை வீரர் ஷாருக்கான் தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய ஆட்டம்
காஞ்சிபுரம் – மதுரை
இடம் : என்.பி.ஆர் (திண்டுக்கல்)
நேரம் : இரவு 7:15 மணிக்கு.

Leave a Reply

You must be logged in to post a comment.