தூத்துக்குடி;
டயோசீஸ் தேர்தலில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் போட்டியிடக் கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக துாத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: துாத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்களில் போட்டியிட துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் மனு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இச்செயல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானது. தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1973 மற்றும் தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1974இன் படி அரசு பள்ளிகளில் பணிபுரிபவர்கள், சிறுபான்மை பள்ளிகளில் வேலை செய்வோர் அரசியல், மதம், இனம் போன்ற தேர்தலில் நிற்கலாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக நாசரேத்தை சேர்ந்த ஜெ.டி.டி. சத்தியா என்பவர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். இந்நிலையில், தலைமை ஆசிரியர்கள் டயோசீஸ் தேர்தலில் போட்டியிடக்கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: