கோவை,
மத்திய அரசு கொண்டு வரும் சாலை போக்குவரத்து சட்ட திருத்த மசோதவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டுகமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக மத்திய பாஜக மோடி அரசு கொண்டு வரும் சாலை போக்குவரத்து சட்ட திருத்த மசோதவிற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் 20க்கும் மேற்பட்ட அரசுபோக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டுகமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கோவை உக்கடம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு கோவை மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேளாங்கன்ணி ராஜ், எல்பிஎப் நிர்வாகி லூயிஸ், பணியாளர் சங்கத்தின் மோகன் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல் கோவை சுங்கம் பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சாலை போக்குவரத்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபீக், சிஐடியு மாவட்ட நிர்வாகி அருணகிரிநாதன், எல்பிஎம் நாகராஜ், ஆனந்தன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: