சென்னை,
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் உள்ளன. 3 மாடி கொண்ட இந்த வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்து விட்டு புதிதாக 13 மாடிகள் கொண்ட குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் கட்டுவதற்காகவும், அதனால் வீடுகளை காலி செய்யும்படி அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது. திடீரென்று வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் தரும்படி வலியுறுத்தினர். இந்த பகுதியில் கடந்த 46 ஆண்டுகளாக குடியிருக்கும் அப்பகுதி மக்களுக்கு புதிய குடியிருப்புக்களை தற்போது உள்ள நிலைலேயே கட்டித்தரவேண்டும், 3 மாடி குடியிப்புகளை முறையாக பராமரிக்காத நிலையில் 13 மாடிகள் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி குடிசைபகுதி மாற்று வாரியம் அடுக்கு மாடி குடியிருப்போர் நலசங்கம் போராட்டக்குழு சார்பில் செவ்வாயன்று (ஜூலை24) மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் ஆர்.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் ஜியா, சிபிஎம் பகுதிசெயலாளர் விஜயகுமார், எஸ்.ராணி, முரளி,ஜீவா முனுசாமி, பரதன் (சிபிஎம்), காத்தவராயன் (சிபிஐ), ஆனந்தன் (காங்கிரஸ்),ஆதவன் (விசி), வேல்முருகன், நாராயணன் (தேமுதிக), சிவக்குமார் (ஜனநாயக கட்சி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.