புதுக்கோட்டை:
தமிழகத்தில் பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்தும் வகை யில் கட்சியின் அரசியல் வியூகம் இருக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமையன்று அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

தமிழக அரசு சொத்துவரியை ஒரு மடங்கு உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. தேர்ந்தெ டுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமே வரி வசூலை நிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதலான வரியை திரும்பப்பெறாவிட்டால் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாடு ஒன்றரை வருடங்களாக உள்ளாட்சி மன்றங்கள் இல்லாமல் இருப்பதால் கடந்த இரண்டு ஆண்டு
களில் மத்திய அரசிலிருந்து கிடைக்க வேண்டிய சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகம் இழந்திருக்கிறது.

திட்டக் கமிஷனைத் தொடர்ந்து மத்திய அரசு உயர்கல்விக்கான மானியக்குழுவையும் கலைத்துள் ளது. அதிகாரம் முழுவதையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. இப்படி மாநில உரிமைகளை பறித்துவரும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வாக்க
ளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

மழை அதிகமாகப் பெய்ததால் திறந்துவிடப்படும் உபரிநீரை நீர்ப் பங்கீட்டில் கழித்துவிடும் வகையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிக்கை விடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. தமி ழக அரசு இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட வேண்டும். தற்பொ ழுது மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் பெரு
மளவு கடலில் கலக்கும் அபாயம் உள்ளது. ஏரி, குளங்களை தூர் வாரி, மரமாத்துப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொண்டிருந்தால் நீரை முறையாக சேமித்து வைத் திருக்க முடியும்.
மத்திய, மாநில அரசுகள் நூறுநாள் வேலைத் திட்டத்தை சீர ழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன முழக்கப் போராட்டங்கள் நடை பெற்றுள்ளது. ஆயிரம் பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில்
50 பேருக்கு மட்டுமே வழங்கப்படு கிறது.

எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் நடைபயணம் செல்வ தற்குத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்குமா என்று தெரியவில்லை. அனு மதிக்கவில்லை என்றால் தடையை மீறி நடத்துவோம். கைது செய்தால்
விடுதலை செய்தவுடன் மீண்டும் தொடங்குவோம். முதல்வரின் உறவினராக உள்ள
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. நெடு ஞ்சாலைத்துறைக்கும் அவர்தான் பொறுப்பு என்பதால் இதற்கு முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தில்லி பயணம் அரசுப் பயணம் அல்ல. அரசியல்
பயணம். எப்படியாவது அதிமுக வை கைக்குள் போட்டுக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒன்றிரண்டு இடங் களையாவது பாஜக கைப்பற்றிவிட வேண்டுமென்ற வியூகங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக் கிறது. நிச்சயமாக அதிமுக – பாஜகவை தமிழக மக்கள் நிரா கரிப்பார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் வீழ்த்தும் வகையில் எங்கள் கட்சியின் அரசியல் வியூகம் இருக்கும்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, சி.அன்புமணவாளன் ஆகியோர் உடனிருந்தனர்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.