நாமக்கல்,
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் மோளிப்பள்ளி வி.ராமசாமியின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது.

 நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் மோளிப்பள்ளியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு சி.பெரியசாமி தலைமை வகித்தார். கட்சி கொடியினை மூத்த தோழர் செங்கோடன் கொடி ஏற்றி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், என்.வேலுசாமி, சு.சுரேஷ், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், நகர செயலாளர் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமையில் தோழரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டஉதவிச் செயலாளர் சிவராஜ், மணிவேல் உட்பட கலந்து கொண்டனர். இதேபோல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தோழரது உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.