அக்பர் கான் படுகொலை தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில், ‘முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.

‘உண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். பசுவை கடத்திச் செல்கிறார் என நினைத்து ஆல்வார் அருகே ஒரு முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்துக்கொலை செய்துள்ளது. ஆனால், பாஜக-வினரோ அப்பாவிகளை அடித்துக்கொல்லும் நிகழ்வுகள் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபின், ‘இந்து வெற்றிகளிப்பு அலை’ நாட்டையே துடைத்தெடுத்து விட்டது. 2014-இல் இருந்து இதுவரை சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் 389 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; அண்மையில், கால்நடைகளை ஏற்றிச் சென்ற டிரக் மீது சவாரி செய்ததற்காக காஷ்மீரில் 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.

இதையெல்லாம் பார்க்கும் போது, ஒரு முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பாக தெரிகிறது’ என்று ட்விட்டரில் சசி தரூர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.