மேட்டூர்,
மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை திங்களன்று எட்டியது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 16 கண் மதகு வழியாக நீரினை வெளியேற்ற செய்தனர். மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 17 ஆயிரம் 500 கனஅடி நீரும், 8 கண் மதகு வழியாக 22 ஆயிரம் 500 கன அடி நீரும் ஆக மொத்தம் 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் மற்றும் மீட்பு துறை, காவல்துறையினர் மூலம் ஊர் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணை 120 அடியை தொட்டது. அதன் பின்பு இந்த வருடம் 120 அடி தொட்டு உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து வரலாற்றில் 39 ஆவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.