1999-ஜுலை 23- தாமிரபரணி ஆறு காலையில் சலனமின்றி பயணித்து கொண்டிருந்தது. அதை போலவே பாவப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எந்தவித ஆரவாரமும் இன்றி நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கூடினர். அந்த தானா. முனா. ரோட்டில் கிடைக்கும் காஞ்ச இட்லியை கூட வாங்கி சாப்பிட வழியற்ற கூட்டம் அது. கூலி கேட்டு மனு கொடுக்க கொக்கிரகுளம்,கலெக்டர் அலுவலகம் நோக்கி பயணிக்க எத்தனிக்கும் இவர்கள்.

அப்போது திமுக-ஆட்சி. பாம்பே-பார்மா ட்ரேடிக் கம்பெனிக்கும் திமுகாவிற்கும் அப்படி ஒரு வர்க்க பந்தம்.

பட்டாளிகள்.அதுவும் தலீத் பட்டாளிகள்- ஊர்வலமாக கலெக்டர் அலுவலம் வருவதை கூட சகிக்க முடியவில்லை- ஆட்சியாளர்களுக்கு. அந்த அளவுக்கு வர்க்க கடமை அவர்களுக்கு. தொழிலாளிகளுக்கே வயிற்று பசி.

வெறும் 2000-பேர் தான். அமைதியாக-நிராயுதபணியாக தொழிலாளிகள்.

நான் சிஐடியு மாவட்ட செயலாளர்.ஊர்வலத்தில் பயணிக்க இருந்த நான், எனது பெரியப்பாவின் மரண செய்தி கேட்டு முதுகுளத்தூர் பக்கம் உள்ள எனது பூர்வீக கிராமம் செல்ல நேர்ந்தது. ஆகவே அன்பு தோழர். வீ.பழனி (அன்றைய சிபிஎம் மாவட்ட செயலாளர்) நமது தரப்பில் பேரணிக்கு தலைமை தாங்கினார். சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் திரு.சோ.பாலகிருஷ்ணன்(தமாகா),டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சிபிஐ,சில இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் தலைமை தாங்கினர்.

தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து வலதுபுறம் கொக்கிரகுளம் சாலை. அங்கு தான்-ஆற்றாங்ககரை மேலேயே வெள்ளைக்காரன்- கட்டபொம்மன் முதல் வ.உ.சி வரை விசாரணை நடத்திய கலெக்டர் அலுவலகம்.

காவல்துறை அரசின் அடக்குமுறை கருவி என்ற லெனினிய வரையரையை நிரூபிக்க தொடங்கினர். அதோடு இந்திய நிலபிரபுத்துவ ஜாதிய வன்மமும் சேர்ந்து கொண்டது.

17-பேர் ஆற்றில் அடித்து மிதக்க விட்டனர்.”மூழ்கி மூச்சு திணறி”-இறந்ததாக விசாரணை கமிஷன் கதை முடித்தது.

அந்த ரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் கொலையிருமாய் கிடந்தார் தோழர் பழனி. பின்னர் அவர் நினைவு திரும்புவதற்கே நீண்ட நாட்களாகியது.

நான் இந்த துயரசெய்தி அறிந்து இரவோடு இரவாக நெல்லை திரும்பினேன்.
தோழர். பழனி ஆஸ்பத்திரியில்…… ஆகவே அடுத்த கட்ட பணிகளை ஒருங்கிணைத்தேன். ஒரிரு நாட்களிலேயே திருநெல்வேலி டவுண் வாகையடி முக்கில் பிரமாண்ட கண்டன கூட்டம். அதற்கும் திமுக அரசு அனுமதி மறுப்பு- நள்ளிரவில் என்னை எழுப்பி போலீஸ் அதிகாரி அறிவிப்பு. வாக்கி-டாக்கியில் ஒரு உயர் அதிகாரி என்னிடம் தகவல் கூறுகிறார். “ஓகே..சார்..இதுதான் உமது ஆர்டர் என்றால்….நாளைய தினம், கம்யூனிஸ்ட்டுகள் உமது அனைத்து ஆணைகளையும், தடைகளையும் மீறுவோம்” என்றேன்.

அடேயப்பா.. தீரத்தோடு எமது தோழர்கள் நெல்லை மாவட்ட தோழர்களோடு தூத்துக்குடி, விருதுநகர், குமரி மாவட்ட தோழர்கள் திரண்டு விட்டனர். போலீஸ் ஒதுங்கி கொண்டது. பட்டாளி வர்க்கத்தின் ஆன்மாவாக தோழர். ஏ.சவுந்தரராஜன் கண்டன உரை………

இன்னும் ஏராளம்…..ஏராளம்….

தோழர். ஆர். கிருஷ்ணன் Ex.MLA மற்றும் தோழர் பி.தியாகராஜன் போன்ற எண்ணற்ற நமது தலைவர்கள், தோழர்களின் மகத்தான உழைப்பும் நினைவு கூர தக்கதே..

அந்த மாஞ்சோலை தியாகிகள்- வர்க்க போராட்ட தியாகிகள்…. பட்டாளி வர்க்க இயக்கம் எப்போதும் நினைவேந்தல் செய்ய வேண்டும்.

Karumalaiyan

Leave A Reply

%d bloggers like this: