சேலம்,
ஆத்தூர் தாலுகா பைத்தூர் ஊராட்சியில் உள்ள மலைகிராமத்திற்கு பேருந்து வசதியை விரிவுப்படுத்திட வலியுறுத்தி அரசு பேருந்தை சிறை பிடித்து சிபிஎம் கட்சி தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா பைத்தூர் ஊராட்சியில் உள்ள கல்லுகட்டு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட மலைவாழ்மக்களும் வாழ்ந்துவருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் இருந்தும் இப்பகுதிக்கு பேருந்து வசதி செய்யப்படவில்லை. இதனை சரி செய்ய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆத்தூர் போக்குவரத்து கிளை மேலாளரிடமும், போக்குவரத்து பொதுமேலாளரிடம் பல முறையிட்டு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத்தை கண்டித்து திங்களன்று பைத்தூர் பகுதியில் வந்த அரசு பேருந்தை கல்லுகட்டு பகுதி வரை ஓட்டி செல்லுமாறு சிபிஎம் தாலுகா செயலாளர் எ.முருகேசன் தலைமையில் பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து அங்கு வஜ்ரா வாகனம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளுடன் வந்த காவல் துறையினர் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் மாணவர்களுடன் சேர்த்து தங்களையும் கைது செய்யுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு நாட்களில் கல்லுக்கட்டு பகுதிக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்
டம் கைவிடப்பட்டது.

போராட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தாலுகா குழு உறுப்பினர்கள் இல.கலைமணி, ஆர்.வெங்கடாச்சலம், கல்லுக்கட்டு கிளை செயலாளர் சி.கருப்பன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.