ஈரோடு,
பவானி தாலுகா, ஜம்பை பகுதியில் புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா ஜம்பையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறார்கள். ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜம்டேக்ஸ் கூட்டுறவு நெசவாளர்கைத்தறி ஜமக்காளம் சொசைட்டி ஊரின் மையப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பகுதியில் மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மதுக்கடை அமைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஜம்பை பகுதி ஊர் பொதுமக்கள் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.