சென்னை,
மருத்துவ மாணவர் சேர்க்கையை போல் பொறியியல் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார்.சென்னையில் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலைய பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவர் எம்.பி. பூனியா செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் நீட் தேர்வு போலவே பொறியியல் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே 2019ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி நீட் தேர்வையே இப்போதும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பொறியியல் கல்லூரிக்கும் நீட்தேர்வு வரும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: