முஜாபர்பூர் :

பீகார் மாநிலம் முஜாபர்பூர் நகரில் அரசு மானிய உதவியுடன் இயங்கி வரும் பாதுகாப்பு விடுதியில் உள்ள 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டும் உள்ளார். இதுதொடர்பாக, விடுதியில் இருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பல குழந்தைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளன. இதன் அறிக்கை வரும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40க்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த விடுதியை சுற்றியுள்ள நிலத்தை தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தலைமை காவல் கண்காணிப்பாளர் ஹர்ப்ரீத் கவூர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பீகாரில் நடந்துவரும் பாஜக கூட்டணி ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜாஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: