தரங்கம்பாடி,
நாகப்பட்டினம் மாவட்டம் ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கி முன்பு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து திங்களன்று விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாகநிழலுக்காக அமைத்திருந்த பந்தலை பிரித்தெறிந்து காவல்துறை யினர் அராஜகம் செய்தனர்.

2016 – 17 ஆம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை பாதிப்புக்கு ஏற்றபடி வழங்கப்பட்ட நிலையில், காலமநல்லூர் ஊராட்சி பகுதிகளில் 100 சதவீத பாதிப்பு என அரசு ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்த பின்ன ரும், காலமநல்லூர், குமாரக்குடி, சங்கேந்தி, வடக்கட்டளை, ராதா நல்லூர், கீழவேலி, தோட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 338 விவசாயி களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. பலமுறை போராட்டங் களை நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லையென விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் வெற்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு அலட்சியம் காட்டுவ தாகவும் கூறி ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், வட்டச் செயலாளர் ராசையன், கோவிந்த சாமி, வட்டத் தலைவர் ஜெகதீசன், சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.  விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வருவதாகக் கூறிய நிலையில், அதிகாரிகள் யாரும் வராததால் கூட்டுறவு வங்கி முன்பு நிழலுக்காக பந்தல் அமைக்கப் பட்டபோது, காவல்துறையினர் அத்து மீறி அராஜகமான முறையில் பந்தலை பிரித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க தலைவர்கள், விவசாயிகளை கைது செய்தனர்.  இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வரை விவசாயிகளுக்காக போராடுவோம் என கூறியுள்ளது.

(ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.