நாமக்கல்,
கிராமப்புற வேலை உறுதிதிட்டத்தை முறையாக செயல்படுத்தக்கோரி நடைபெறும் தொடர் முழக்க போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பள்ளிபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின்படி வேலையும், கூலியும் முழுமையாக வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல்வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று தொடர்முழக்க போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி திங்களன்று நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் முழுவதும் கிராம அளவிலான பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் விவசாய தொழிலாளர்சங்க மாவட்டத் தலைவர் துரைசாமி, மாநிலக்குழு உறுப்பினர் சம்பூரணம் மற்றும் மூர்த்தி, தமிழ்ச்செல்வி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.