சென்னை:
புதிய பாதுகாப்பு அதிகாரி
தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கார் கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கியது.இதில் அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பினார். இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுதில்லி
‘குடிப்பதற்கு உகந்ததல்ல’
நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி நிலத்தடி நீர் குறித்து எம்.பி சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ‘தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில் அந்தப்
பகுதியிலுள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று தெரியவந்தது’ என்றார்.

புதுதில்லி
மோடியின் ‘புதிய இந்தியா’
`பொது மக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அக்பர் கானை, 6 கிமீ தூரம் உள்ள
மருத்துவமனைக்கு, 3 மணி நேரத்துக்குப் பிறகே போலீசார் அழைத்துச் சென்றுள்ள னர். மோடியின் புதிய இந்தியாவில் மனிதத்தன்மைக்குப் பதிலாக வெறுப்பு உணர்வு அதிகரித்து, மக்கள் நசுக்கப்பட்டு உயிரை விடுகிறார்கள்’ என ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுதில்லி
இனி ரூ.250 தான் டெபாசிட்
10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளின் சிறு சேமிப்புக்காக உரு வாக்கப்பட்ட சுகன்ய சம்ருதி யோஜ்னா திட்டத்தில் சில விதிமுறைகளை மாற்றி யமைத்துள்ளது மத்திய அரசு. முன்னதாகக் குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாயாக இருந்தது. தற்போது அது ரூ.250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மும்பை
பாஜக தனித்து போட்டியா?
மும்பை, தாதர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட அமித்ஷா, வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடும் வகையில் அனைத்துப் பணிகளையும் தொடங்குமாறு நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம்
போலி ஐ.டி.அதிகாரிகள்!
காஞ்சிபுரத்தில் குமரவேல் என்னும் தனியார் நிதிநிறுவன அதிபரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குமரவேல் ஊரில் இல்லாத சமயத்தில், அவரின் மாமியார் மட்டும் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து 5 பேர் கொண்ட கும்பல் இந்தப் போலி ஐடி ரெய்டு நடத்தியுள்ளது.

புதுதில்லி
அதிக வருவாய் ஐஐடி
நாட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டும் நிறுவன ங்களின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மும்பை ஐ.ஐ.டி நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்னை, தில்லி ஆகிய ஐஐடி நிறுவனங்கள் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.

புதுதில்லி
கன மழைக்கு வாய்ப்பு
இந்தியாவின் பல மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய
வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மேற்குவங்கம், திரிபுரா, சிக்கிம், நாகா லாந்து மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதி
களில் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு
‘மேகதாது அணை உறுதி’
காவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயமாகக் கட்டப்படும் எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள், விவசாய பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவேன், அவர்களை சந்திக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.