போபால் :

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதாகும் ஜூனைட் கான் என்ற மாணவர் வாட்ஸ்ஆப்பில் தவறான செய்தியை அனுப்பியதாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், தவறான தகவலை அனுப்பியவர் இர்பான் என்பவர் எனவும், அவர் அட்மினாக இருந்து செய்தியை வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் அனுப்பிவிட்டு வெளியேறிவிட்டதால் ஜூனைட் தன்னிச்சையான அட்மின் ஆக மாறியதால் அவர் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார் என அவரின் உறவினரான பரூக்கான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பான வழக்கு வரும் சமயத்தில் அக்குழுவின் அட்மினாக ஜூனைட் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிந்துள்ள பச்சோர் காவல் நிலைய அதிகாரி யுவராஜ்சிங் சௌகான் தெரிவித்தார்.

தற்போது மாணவர் ஜூனைட் கானுக்கு கல்லூரித் தேர்வு நடைபெறுவதால், அவர் எழுத முடியாமல் படிப்பு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக தலைமை அதிகாரிகளை அணுக முயற்சித்தும் பலனில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: