சென்னை,
தமிழகத்தில் 50 முதல் 100 சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் தமிழக மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான வரி வருவாயில் பிரதானமானது, சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். நடப்பாண்டில், 900 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில், 1998க்கு பிறகு, சொத்துவரி மாற்றி அமைக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சொத்துவரியை உயர்த்த, பலமுறை பரிந்துரை வழங்கப்பட்டும் சொத்து வரி மாறி அமைக்கப்பட வில்லை .
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் சொத்து வரி 50 முதல் 100 சதவிகிதம் அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வாடகை குடியிருப்புகளுக்கு சொத்து வரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பு 6 மாதத்திற்கான சொத்துவரியிலேயே புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

Leave A Reply

%d bloggers like this: