கும்பகோணம்,
பாதாளச் சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்யும் இயந்திரத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் புதிதாக வந்துள்ள பாதாளச் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை பார்வையிட்ட சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் பாதாளச் சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக இயந்திரம் ஒன்று வந்துள் ளது. கேரளாவில் ஏற்கெனவே இது பயன்படுத்தபட்டு வருகிறது. அதேபோல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உதவியுடன் கும்பகோணம் நகராட்சியில் ஒரு இயந்திரம் மட்டும் 17 லட்சம் ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது. அதற்கு பேண்டிகோட் என்று பெயர். பெருச்சாலியை போன்று பாதாளச் சாக்கடையில் உள்ளே புகுந்து கழிவுகளை சுத்தம் செய்கிறது. அதை நேரில் பார்த்தோம். இது தொடர்பாக அதன் உபயோக முறையை சம்பந்தப்பட்டவர்கள் விளக்கினர்.  மனிதர்கள் பாதாளச் சாக்கடை கழிவுகளை அகற்றும்போது பலமுறை விஷவாயு தாக்கி இறக்கின்றனர். இது இயற்கை மரணம் என்று கூற முடியாது. வேலை செய்யக்கூடிய இடத்தில் அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தான் கூற முடியும். நீதிமன்ற தீர்ப்புகள் உட்பட பல விஷயங்கள் இருந்தும் இன்றைக்கு வரை தமிழக அரசு இதன் மீது கவனம் செலுத்தவில்லை. பாதாளச் சாக்கடையில் இறங்கி நம்முடைய அருந்ததிய, தலித் மக்கள் செத்துக் கொண்டிருக்கிற இக்காலக்கட்டத் தில், தமிழக முழுவதும் இந்த இயந்திர முறை விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(ந.நி)

Leave A Reply

%d bloggers like this: