சென்னை,
ஒற்றுமை என்ற ஆயுதத்தால் மக்கள் விரோத மோடி அரசை விரட்டியடிப்போம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் பொருளாதார நிபுணருமான டாக்டர்.

அசோக் தவாலே கூறினார். சென்னை கேரளசமாஜத்தில் சனிக்கிழமையன்று (ஜூலை 21) “மகராஷ்டிர விவசாயிகளின் நீண்டபயணமும் அனுபவங்களும் படிப்பினைகளும் ’என்ற தலைப்பில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது, இந்தியாவில் விவசாயம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்புக் குள்ளாகி வருகிறது. ஆட்சியாளர்களின் அரசியல் திறமையின்மையாலும், நவீன தாராளமயத்தின் விளைவாகவும் கடந்த 30 ஆண்டுகளாக வேளாண் விளை பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு அரசு வழங்கிய மானியத்தை ரத்து செய்ததும், கார்ப்பரேட் மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு வழங்கிய சலுகைகளே இந்த பாதிப்புகளுக்கு காரணம் ஆகும்.

உலகமயம், தாராளமயம், தனியார் மயத்தின் விளைவாக உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதைகளின் விலை கண்மூடித்தனமாக உயர்த் தப்பட்டது. அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனம், உலக வங்கி நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணிந்து ஆட்சியாளர்கள் இந்திய விவசாயிகளை வதைத்து வருகின்றனர். பெருமுதலாளிகளுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள், விவசாயிகளின் உரிமைகள் குறித்தோ, பசி குறித்தோ அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக எடுத்துள்ள இந்த மோசமான கொள்கைகளின் விளைவால் 1997ஆம் ஆண்டிலிருந்து சுமார் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்தியாவில் 85 விழுக்காடு விவசாயிகள் கடன் சுமையில் விழிபிதுங்கி நிற்கின்றனர். வங்கிகளில் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிசெலுத்தாத ரூ.12 லட்சம் கோடியை செயல்படாத சொத்தாக அறிவித்து ரூ. 3.30 லட்சம் கோடியை அரசு தள்ளுபடி செய்கிறது. சலுகை என்ற பெயரில் பொதுமக்களின் சேமிப்பு பணம் வீரயமாக்கப்படுகிறது.

விவசாய விளைபொருட்களுக்கான நியாயமான விலையின்மையால் கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் பரிதவித்துக்கொண்டிருந்த நிலையில், தான் நாசிக்கில் இருந்து மும் பைக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் வீறுகொண்ட பேரணியை நடத்தினர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநில விவசாயிகளின் வீரஞ் செறிந்த எழுச்சிக்குப் பின்னால் முக்கிய உந்துசக்தியாக அகில இந் திய விவசாயிகள் சங்கம் உள்ளது. மாற்று அரசியல் சிந்தனை கொண்டவர்களை கூட இந்த பேரணி தன்பால் ஈர்த்தது. முதலில் மவுனம் சாதித்த ஊடகங்கள் கூட விவசாயிகளின் நியாயத்தினை உணர்ந்து செயல்பட்டது. மும்பை மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படக் கூடாது என்று இரவு முழுவதும் நடந்து தங்கள் பாதத்தை தேய்த்துக் கொண்ட விவசாயிகளை உலகமே மரியாதையோடு கவனித்தது.

விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கும் சீறிய வழிகாட்டலுக்கும் கிடைத்த வெற்றியாக விவசாயிகள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் மக்கள் விரோத ஆட்சியாளர்களை ஒற்றுமை என்ற ஆயுதம் ஏந்தி விரட்டியடிப் போம் என்றார். இந்நிகழ்விற்கு பொருளாதார நிபுணர் டாக்டர்.ஏ. ஜெயரஞ்சன் தலைமை தாங்கினார். சமூக விஞ்ஞானக்கழகம் அமைப்பாளர் ஞானகுரு வரவேற்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.