சிம்லா,
இமாச்சல் பிரதேசத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தின் நெர் சவுக் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து
3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.