திருப்பூர்,
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை இணைந்து சனியன்று பங்களாஸ்டாப் அருகில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை அலுவலர் முருகன் தலைமை வகித்தார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். மருத்துவர் பிரியதர்ஷினி வாழ்த்துரை வழங்கினார். இதில் மாணவர்கள் அங்குள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் தேங்கி இருந்த தண்ணீரை சுத்தம் செய்தனர். மேலும், கிருமிதொற்றுகள் பரவாமல் இருப்பதற்காக மருந்துகள் தெளித்தனர். இதனால் அந்த மகப்பேறு மருத்துவமனை தூய்மையாக காணப்பட்டது. இந்த தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: