தாராபுரம்,
தாராபுரம் தாலுகா பொது தொழிலாளர் சங்க (சிஐடியு) மகாசபைக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல், பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தாராபுரம் தாலுகா பொதுத்தொழிலாளர் சங்கத்தின் 20 வது மகாசபை கூட்டம் ளவாய்பட்டிணம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. க்கூட்டத்திற்கு என்.கனகராஜ் தலைமை வகித்தார். ஆர்.சண்முகம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கே.மேகவர்ணன் வரவேற்றார். சங்க சட்ட திருத்தங்களை டி.மோகன் முன்மொழிந்தார். இதையடுத்து பி.பொன்னுச்சாமி, கே.கோவிந்தராஜ் வைத்து அறிக்கையிள் மீது விவாதம் நடைபெற்றது. மேலும், தீர்மானங்களை என்.காளியப்பன், கே.முருகானந்தம், கிருஷ்ணசாமி, பழனிச்சாமி, முனியம்மாள் ஆகியோர் முன்மொழிந்தனர். சிஐடியு மாவட்ட துணை தலைவர் ப.கு.சத்தியமுர்த்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக, நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பென்சன் தொகை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தவேண்டும். பெட்ரோல், டீசல்பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையை குறைக்கவேண்டும். ஆகஸ்ட் 9 அன்று நடைபெற உள்ள மோடி ஆட்சியே வெளியேறு என்ற முழக்கத்துடன் அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது. தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும். தாராபுரம் நகராட்சி சார்பில் காய்கறி மார்க்கெட்டில் சுங்கவரி வசூல் செய்வதை நீக்க வேண்டும். நகர்ப்பகுதி முழுவதும் சுங்கவரி வசூல் செய்வதை கண்டிப்பதுடன், நகராட்சி நிர்வாகம் உடனடியாக சுங்கவரி வசூலிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும்.

மேலும், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள செட்டியார் தோட்டம் பகுதியில் பல ஆண்டுகளாக சாக்கடை வெளியேற்றுவதற்கான கால்வாய் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், சங்கர் மில் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சாக்கடை நிரம்பி வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. இதை சீர்செய்வதற்கு கால்வாயை விரிவுப் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
தலைவராக என்.கனகராஜ், செயலாளராக பி.பொன்னுச்சாமி, பொருளாளராக கே.கோவிந்தராஜ், துணை தலைவராக கிருஷ்ணசாமி, துணை செயலாளராக கே.மேகவர்ணன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கமிட்டியும் தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.