புதுதில்லி,
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டியின் முதல் கூட்டம் தில்லியில் ஞாயிறன்று நடைபெற்றது.

ராகுல் காந்தி தலைமை யில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், இந்தியா வின் ஜனநாயகத்தை சீர ழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களைச் சந்தித்து அவர் களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் நாம் உழைக்க வேண்டும் என ராகுல் காந்தி பேசினார். வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட், தேர்தல் பிரச்சார குழு அமைப்பது, எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி அமைப்பது ஆகிய அதிகாரங்கள் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.