திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க 6 வது மகாசபை ஞாயிறன்று சிஐடியு  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மகாசபை கூட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளார்கள் சங்க மாவட்ட தலைவர் அன்பு தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன் சங்க கொடியை ஏற்றினார். துணை தலைவர் கே.ராம்ராஜ் வரவேற்றார். துணை செயலாளர் அப்துல் மஜீத் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சம்மேளன துணை செயலாளர் ஆர்.செல்வராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் லாரன்ஸ் உள்ளிட்டோர் அறிக்கை வைத்தனர். சிஐடியு மாநில துணை தலைவர் எம்.சந்திரன், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் என்.சுப்பிரமணியம் மோட்டார் சங்க தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.

இதில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காவல் துறையினர் மோட்டார் வாகன சோதனையின் போது கட்டணங்கள் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்ட சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறை சாலைகளை செப்பனிட வேண்டும் என பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
மாவட்ட தலைவராக டி.வி.சுகுமார், செயலாளராக சிவராமன், பொருளாளராக அன்பு உள்ளிட்ட 20 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. பின்பு, சம்மேளன பொது செயலாளர் எம்.சிவாஜி நிறைரையாற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.