திருப்பூர்,
தமிழக அரசு முற்றிலுமாக மத்தியில் ஆளும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தமிழகத்தில் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத அரசாக உள்ளது என தேமுதிக மாநில துணைச்செயலாளர் சுதீஷ் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துணை செயலாளர் சுதீஷ் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், தமிழக  அரசு முழுமையாக பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் தமிழக அரசு ஒரு செயல்படாத நிலையில், எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. லாரி வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது என்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: