சேலம் :

இன்று காலை சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர், மேட்டூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.3 எனும் அளவில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்வால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார். மேலும், பளுதூக்கி இயந்திரங்களை உபயோகம் செய்ய வேண்டாம் எனவும், நில அதிர்வு ஏற்படும்போது மக்கள் திறந்தவெளியில் நிற்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: