சேலம் :

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கினர்.

சேலம் ரெட்டியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது குடும்பத்துடன் சென்ற சரவணன் என்பவர் இன்று காலை காவிரியில் குளிக்கச் சென்றுள்ளனர். தற்போது அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தில் ஏற்படும் நீர்ச் சுழலில் சிக்கி மூழ்கினர். பின்பு அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சரவணன், வானுஸ்ரீ, மைதிலி மற்றும் ஹரிஹரன் என்ற சிறுவன் உள்பட 4 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார்.

 

 

 

Leave a Reply

You must be logged in to post a comment.