பைசாபாத் :

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பள்ளியை ஒற்றை ஆசிரியராக நிர்வகித்துவரும் முகேஷ் யாதவ் கூறுகையில், பள்ளியின் கட்டிடத்தின் மோசமான நிலைமையினால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 55 மாணவர்களை ஒரே அறையில் படிக்க வைத்து பாடம் நடத்தி வருகிறேன். பள்ளியில் இருக்கும் மற்ற எந்த அறைகளும் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை.

மேலும், மாணவர்கள் உபயோகிக்க கழிவறை வசதியும் இல்லை, குடிக்க சுகாதாரமான குடிநீர் வசதியும் இல்லை. பள்ளிக்கு மதில் சுவர் இல்லாமல் கால்நடைகள் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் அவல நிலை இருக்கிறது. பள்ளியின் இந்நிலையை மேம்படுத்த அதிகாரிகளை அணுகியும் இதுவரை எந்த பலனும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: