நாமக்கல்,
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகாசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் 31 வது மகாசபை கூட்டம் சிஐடியு சங்க மாவட்டஅலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்க கொடியினை மாவட்ட உதவிச் செயலாளர் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் அசோகன் துவக்கி வைத்துப் பேசினார். சங்க மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், பொருளாளர் சரவணவேல் அறிக்கை முன்வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முன்னதாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை, குறைந்தபட்சம் மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வாரியத்தின் மூலம் வழங்கும் பணப் பலன்களை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கட்டுமான நலவாரியத்தில் வழங்குவது போல் அனைத்துதொழிலாளர்களுக்கும் பென்சன் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். 50 வயதுடைய பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, புதிய தலைவராக சங்கரன், செயலாளராக காசிவிஸ்வநாதன், பொருளாளராக சரவணன், உதவி தலைவராக பொன்னம்பலம், உதவிச் செயலாளராக மாதவன், உட்பட 13 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. இறுதியாக சிஐடியு மாவட்டசெயலாளர் ந.வேலுசாமி நிறைவுரை ஆற்றினார். சங்க மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரராஜன் நன்றி உரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: