தஞ்சாவூர்,
தமிழர் மருத்துவம், அறிவியல், சட்டம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமையன்று நடை பெற்ற 11 ஆவது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை ஏற்று பட்டங் களை வழங்கினார். தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பேசியதாவது:  தமிழ் மொழி எத்தனை வலிமை பெற்றது என்பதனை உலகிற்கு எடுத்து சொல்வோர் இல்லை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள்தங்கள் நலனுக்காக, அறிவு நுணுக் கங்களுக்காக தமிழை நோக்கி தவமிருக்கின்றனர். மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் கருவில் குழந்தையின் வளர்ச்சியை தொல்காப்பி யர் தனது பாடலில் தெளிவாக அக்காலத்தில் சொல்லி விட்டார். நாஸ்டர்டாம் ஆய்வாளர் நடக்கும் நூற்றா ண்டிலே என்ன நடக்கும் என குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அவரையும் மிஞ்சும் வகையில், மாணிக்க வாசகர் 16 வரிகளில் அன்றே திரு வாசகத்தில் எழுதி வைத்துள்ளார். ஆனால், நாம் மாணிக்கவாசகரை மறந்து விட்டோம். நீதித்துறையில், ஆங்கிலேயர் ஆளுகின்ற போது இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் அனைத்தும் அடிப்படை மூலம் எங்கிருந்து என்று பார்த்தால், அது நம் தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

சிலப்பதிகார காதைகளில் கிராம பஞ்சாயத்துக்கள், நீதிமன்றங்கள் எவ்வாறு செயலாற்றி வந்தன என்பதை இளங்கோவடிகள் பொது மன்றங்களை குறித்து சொல்லி வைத்துள்ளார். நீதி பரிபாலனம் எவ்வாறு நடைபெறும் என்பதும் ஆங்கிலேயர்கள் நமக்கு சொல் வதற்கு முன்பாக குற்றங்களுக்கு சாட்சியங்கள் தேவை என்பதையும் சொல்லப்பட்டிருக்கும். பாஞ்சாலி சபதத்தில் அடிமைக்கு தனிப்பட்ட உரிமை இல்லை. அடிமையான தருமர், தன்னை பணய பொருளாக வைத்து சூதாடுவதற்கும் சட்டப்படி உரிமை இல்லை என சொல்லப்பட்டிருக்கும். நீதித்துறை யிலும் தமிழர்கள் தான் முன்னோடி யாக விளங்கியுள்ளனர். தமிழர் அக்காலத்தில் இருந்து அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாக விளங்கியுள்ளனர்” என்றார். இதில் இசை, நாடகம், ஓலைச் சுவடி, நாட்டுப்புறவியல் உள்ளிட்ட 28 துறைகளில் முனைவர், ஆய் வியல் நிறைஞர், முதுகலை போன்ற 7 படிப்புகளுக்கான பட்டம்என மொத்தம் 732 பேருக்கு வழங்கப்பட்டன. பட்டங்களை வழங்குவதற்கு முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “எளிமை யான வாழ்க்கை வாழுங்கள். அது உங்கள் புகழை உயர்த்தி விடும். தமிழ் இனிமையான மொழி. அதனால் தான் நான் அதை விரும்புகிறேன்” என தமிழில் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.