தீக்கதிர்

வேலைகேட்டுச் சென்ற இடத்தில் 40 பேர்களால் பாலியல் வன்கொடுமை…!

சண்டிகர்;
ஹரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியைச் சேர்ந்த 22 வயது திருமணமான பெண் ஒருவர், நான்குநாட்கள் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு, 40 பேர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அரசு வேலை விஷயமாக சந்திக்க வேண்டும் என்று வரச்சொல்லி, சம்பந்தப்பட்ட பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். தற்போது இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.