ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் மாடு கடத்தியதாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில் உள்ள ராம்கர் கிராமத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாடுகளை கடத்திச் சென்றதை பார்த்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கிராமமக்கள் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் அக்பர் கான் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ‘மாட்டை காப்பதற்காக என்று கூறிக் கொண்டு பொது மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் அதைப் போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. அரசு இது குறித்து கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். இரும்புக் கரம் கொண்டு தாக்குதல் நடத்துபவர்களை ஒடுக்கிட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: