நேற்று முன்தினம் புது புது அர்த்தங்கள்

நிகழ்ச்சியில் அய்யப்பன் கோவிலில் பெண்களை நுழைய அனுமதிப்பது தொடர்பாக ஒரு விவாதம்.
நெறியாளர் கார்த்திகேயன்.
நண்பர் திருப்பதி நாராயணன் அதில் பங்கேற்றிருந்தார்.

அப்போது, நெறியாளர் கார்த்திகேயன், அந்த மூன்று நாட்களில், பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றால், பெண் தெய்வங்களும் அந்த மூன்று நாட்கள் கோவிலுக்குள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லுங்களேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஆனந்த விகடன் கவிதையை மேற்கோள் காட்டினார்.

நண்பர் திருப்பதி நாராயணன், இது இழிவானது. இப்படி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றார்.

அத்தோடு விவகாரம் முடிந்து விட்டது.
நேற்று, ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் உரையாற்றியது குறித்து, ஆகா ஓகோவென்று, வரவேற்பு எழுந்ததும் மாலை 4 மணிக்கு ரப்பர் வாயன் ராஜா முகநூலில் இதை பற்றி எழுதுகிறார்.

நெறியாளர் கார்த்திகேயனின் தொலைபேசி எண், வாட்ஸப்பில் பகிரப்படுகிறது. அவரையும், அவர் வீட்டு பெண்களையும் குறித்து, பக்தாளின் வழக்கமான வடிவங்களில் ஆபாச அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. அவருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள். ஆபாச அர்ச்சனைகள்.

அவர் புகைப்படங்கள் பகிரப்பட்டு, மோசமான ஆபாச தாக்குதலுக்கு உள்ளாகிறார். 35 இடங்களில், கார்த்திகேயன் மீது காவல்துறையில் இந்து முன்னணி மாட்டு மூளை பக்தாளால், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வியாழன் காலை 7 மணிக்கு நடந்த ஒரு நிகழ்ச்கிக்கு, கண்டனம் எப்போது தெரிவிக்க வேண்டும்? வியாழன் காலை 9 மணிக்கு தெரிவிக்கலாம். மதியம் தெரிவிக்கலாம். மாலை தெரிவிக்கலாம். இரவு தெரிவிக்கலாம்.
வெள்ளியன்று காலை தெரிவிக்கலாம். மதியம் தெரிவிக்கலாம். மாலை 4 மணிக்கு, ராகுல் பேசிய பிறகு எதற்காக திடீர் கண்டனம் ?

எதற்கு என்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஐயப்பன் கோவிலில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் செல்லக் கூடாது என்றால், அந்த ஐயப்பன் கோவிலே தேவையில்லை. மனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு ? இழுத்து பூட்டுங்கள்.

இப்போது நான் கேட்கிறேன்.

பெண் தெய்வங்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலில் இருந்து வெளியேறுமா ?

என் மீதும் புகார் அளியுங்கள்.

அன்பார்ந்த பக்தர்களே, உங்களின் புரட்டு, மிரட்டு உருட்டல்களை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

நீங்கள் யாரென்று நன்றாக தெரியும். இது போன்ற ஆபாச அர்ச்சனைகளாலும், மிரட்டல்களாலும், கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை தமிழகத்தில் நெறித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அது தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற உங்கள் எண்ணம் போலத்தான் முடியும்.

Shankar A

Leave a Reply

You must be logged in to post a comment.