புலவாயோ:
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது ஒரு நாள் தொடரில் விளைய்டி வருகிறது.புலவாயோவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாலய வெற்றியை ருசித்தது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகர் ஜமான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்து புதிய உலக சாதனையைப் படைத்தது.ஃபகர் ஜமான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்துகளில் 210* ரன்கள் குவித்து இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பு பெருமையை பெற்றார்.

ஒருநாள் அரங்கில் இரட்டை சதமடித்த வீரர்கள் பட்டியல்:
ரோகித் சர்மா (இந்தியா) – 264
மார்டின் குப்தில் (நியூசி.,) – 237*
விரேந்திர சேவாக் (இந்தியா) – 219
கிறிஸ் கெய்ல் (விண்டீஸ்) – 215
ஃபகர் ஜமான் (பாகிஸ்தான்)- 210*
சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) – 200*
இந்திய வீரர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 3 இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: