கண்ட்வா;
சாதி கடந்து, இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்ய முயன்றதற்காக, இளம்பெண் ஒருவரை அவரது தந்தையே உயிரோடு எரித்த சம்பவமும், அதனைத் தடுக்காமால் ஊர்மக்கள் வேடிக்கை பார்த்த கொடூரமும் பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைன்புர். இவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ராஜ்குமார் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் லட்சுமியின் பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனாலும் தத்தமது காதலில் உறுதியாக இருந்த லட்சுமியும் ராஜ்குமாரும், ஒருகட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் பதிவுத்திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதையொட்டி, லட்சுமி தனக்குத் தேவையான சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அதனை அவரது தந்தை பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. உடனே ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, லட்சுமி மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். முன்னதாக லட்சுமி தந்தையிடமிருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக ஓடியுள்ளார்.

ஆனால், அவரை பிடித்து இழுத்துவந்து, அவரது தந்தை தீ வைத்துள்ளார். அதன்பின்னரும் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அலறித் துடித்தபடி லட்சுமி தரையில் உருண்டு, உயிர்பிழைக்க போராடியுள்ளார். ஊராரும் அதை வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால், ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியில் லட்சுமி உடல் முழுவதும் கருகி பலியாகியுள்ளார்.தற்போது இந்த சாதி ஆணவக் கொலை தொடர்பாக, லட்சுமியின் தந்தை சுந்தர் லால் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: