தில்லி: வங்கி ஏ.டி.எம்களில் காலாவதியான மென்பொருள் பயன்படுத்துவதால் ஏ.டி.எம் மோசடிகள் பெருகியுள்ளதாக நாடாளுமன்ற கூட்டத்தில் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கிகளில் நடைபெறும் மோசடி தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. வங்கி ஏ.டி.எம்களில் காலாவதியான மென்பொருள் பயன்படுத்துவதால் ஏ.டி.எம் மோசடிகள் பெருகியுள்ளதாக பதில் அரசு பதில் அளித்துள்ளது.கடந்த ஜூலை 2017 மற்றும் ஜூன் 2018 ஆண்டு இடையே, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பாக 25,000 புகார்களை பெற்றுள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி மேலும் கூறுகையில் நாட்டில் 74% சதவீதம் ஏ.டி.எம்களில் காலாவதியான மென்பொருளை பயன்படுத்திவருவதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தேவையான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுவதில்லை எனவே எளிதில் இந்த ஏ.டி.எம்களில் தாக்கப்பட கூடியாதாக அபய சூழல் நிலவி வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலும் 70% சதவீதத்திற்கும் மேலான ஏ.டி.எம்கள் பொதுத்துறை வங்கிகளின் கீழ் செயல்பட்டுவருபவை. இந்த ஏ.டி.எம்களில் 80% சதவீத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளன.கடந்த மாதம் வங்கிகளின் மென்பொருளை மேம்படுத்துவதற்காக சுற்றறிக்கையை ஆர்.பி.ஐ வெளியிட்டது. இந்த அம்சங்களில் சிலவற்றை பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவில் நடைமுறை படுத்த முடியாது என வங்கிகளின் சார்பாக   தெரிவிக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கி ஏ.டி.எம்களின் பாதுகாப்பு குறைகளை பற்றிய விவரங்களை வெளியிட்ட அரசு தனியார் வங்களின் மற்றும் அவற்றின் ஏ.டி.எம்களை பற்றி பதிலளிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

%d bloggers like this: