ஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்:

இந்தியாவின் வளர்ச்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்க்கும் மோடிக்குத் தேவையான ஊட்டச் சக்தியளிக்கும், அவர் தினமும் உண்ணும் ஸ்பெஷன் காளான் ஒரு கிலோ ரூ.30,000/-.

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக மோடி ஒரே நாளில் பலமுறை உடை மாற்ற வேண்டியது இருக்கிறது அதற்கு நாளொன்றுக்கு ஆகும் செலவு உத்தேசமாக ஒரு லட்சம் ரூபாய்.

கருப்புப்பணத்தை பிடிப்பதற்காக அவர் அணிந்திருக்கும் சூரியக் கண்ணாடி விலை குறைந்தது ரூபாய் ஒரு லட்சம்.

‘வளர்ச்சித் திட்டங்களுக்காக’ அவர் கையெழுத்திடும் பேனாவின் விலை ரூபாய் ஒரு ஒரு லட்சம்.

இந்தியாவை கிளீன் ஆக்குவதற்காக, அவர் முதலில் அழகாக இருக்க வேண்டியதிருக்கிறது. அதற்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு ஒரு லட்சம் ரூபாய்!

இந்தியாவுக்காக ஒபாமாவை சந்திக்க அவர் அணிந்திருந்த ஆடையின் விலை ரூபாய் பத்து லட்சம்.

இது போக, உலகம் முழுவதும் இந்தியாவுக்காக சுற்றுவதற்கு ஆன விமான  போக்கு வரத்து செலவு மட்டும் ரூ 1,843 கோடி.  இந்திய ஏழைகள் அவரைப் பார்ப்பதற்கு ஆன விளம்பரச் செலவுகள் எல்லாம் தனி.

Mathavaraj

 

Leave A Reply

%d bloggers like this: