சென்னையில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் ஆம்ப்ரே அல்லின்க்ஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆம்ப்ரே அல்லின்க்ஸின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த சர்வதேச ஸ்குவாஷ் சங்கம்,இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சுவிட்சர்லாந்து அணி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
சுவிட்சர்லாந்து அணி நிர்வாகம் சார்பில் பதிலளித்த பயிற்சியாளர் பாஸ்கர்,”இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் தங்கள் மகளை அங்கு அனுப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை என ஆம்ப்ரேவின் பெற்றோர் கறராக கூறியதால் சென்னையில் ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆம்ப்ரேவை அனுப்பமாட்டோம் எனவும் வீரர்கள் மட்டுமே இந்தியாவிற்கு வருவார்கள் என சுவிட்சர்லாந்து அணி நிர்வாகம் தெரிவித்தது என கூறினார்.

வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து சுவிட்சர்லாந்து அணி நிர்வாகம் மட்டுமல்ல அமெரிக்கா, ஈரான், ஆஸ்திரேலியா விளையாட்டு நிர்வாகங்களும் தங்கள் நாட்டு வீராங்கனைகளை இந்தியாவிற்கு அனுப்ப தொடக்கம் முதலே தயக்கம் காட்டி வந்தன.எனினும் சென்னைப் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் 28 நாடுகளிலிருந்து 250 வீரர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

போட்டி முடிந்த பின்பு வெளியே செல்லும்போதும் கவர்ச்சியான உடைகளை அணியவேண்டாம் என்று தங்களுடைய வீராங்கனைகளுக்கு சர்வதேச ஸ்குவாஷ் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.