சண்டிகர்,
அரியானா மாநிலத்தில் 60 வயது மந்திரவாதி ஒருவர் 120 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம்  ஃபேதாஹாபாத் மாவட்டம் , தோஹானா நகரை சேர்ந்தவர் பாபா அமர்புரி என்கிற பில்லு. தன்னை மந்திரவாதி என்று சொல்லிக் கொண்ட இவர் ஏராளமான பெண்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து  கொடுத்து பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் பலாத்கார காட்சிகளை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளார்.  இதனால் அச்சமடைந்த பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுவரை அவர் 120 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மந்திரவாதி பில்லுவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அவரது உறவினர் ஒருவர் பெண்களை வீடியோ எடுத்த காட்சிகளை காவல்துறை வசம் ஒப்படைத்தார். ஐந்து நாட்கள் இதை ஆராய்ந்த காவல்துறையினர்,  பில்லுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பில்லுவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Haryana: Baba Amarpuri, a Mahant at Baba Balaknath Temple in Fatehabad’s Tohana, was nabbed by police y’day after videos of him allegedly raping women surfaced online. Police say ‘We filed a case & started probe. His premises were also raided & we seized some suspicious articles’ pic.twitter.com/RGw7HIWwdZ

— ANI (@ANI) July 21, 2018

Leave a Reply

You must be logged in to post a comment.