கோவை,
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் வழங்குமாறு சிபிஐக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை. இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.  இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை வியாழனன்று நடைபெற்றது. இதில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் அவரது சார்பில், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள், சிபிஐ அறிக்கை உள்ளிட்ட விவரங்களை அளிக்குமாறு ரவி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அறிக்கையை தருமாறு சிபிஐக்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: