திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தனியார் விடுதியில் ரஷ்ய பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலைக்கு கடந்த 12 ஆம் தேதி சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த இளம்பெண் அலினா (22), செங்கம் சாலை கஸ்தூரிநகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். கோவில், ஆசிரமங்களை சுற்றிப் பார்த்து லாட்ஜில் தங்கி இருந்த ரஷிய இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. பலத்தகாயங்களுடன் அலங்கோலமான நிலையில், மீட்கப்பட்ட ரஷிய பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தின் குடியுரிமை ஆவண (விசா) ஆய்வு பிரிவு அதிகாரி டென்னிஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, உள்ளிட்டோர் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். வியாழன் இரவு ஆரணி நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, அலினாவிடம் வாக்குமூலம் பெற்றார். இதையடுத்து, ரஷியப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் விடுதி நிர்வாகி பாரதி (31) மற்றும் அவரது அண்ணன் நீலகண்டன் (35), இவர்களுடைய நண்பர்கள் மணிகண்டன் (37) மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் (30) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: