வேலூர்,
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என திருப்பத்தூரில் நடைபெற்ற மின் பகிர்மான வட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, திருப் பத்தூர் கிளைச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். தலைவர்கள் கண்ணையன், சண்முகம், கௌரவ தலைவர் பூவேந்திரன், இணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கிளைச் செயலாளர் சுப்பிரமணியன், தருமபுரி கிளைத் தலைவர் தேவராஜன், மாவட்டச் செயலாளர் தேவதாஸ், நகரச் செயலாளர் சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, மின் வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் அடையாளம் கண்டு பதிவியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.