புதுதில்லி,
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் தமிழில் நீட் தேர்வுஎழுதி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில், நீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்டகுளறுபடிகளுக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம். தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர் என்று சிபிஎஸ்இ கூறியிருந்தது.
இதைத்தொடர்ந்து இன்று வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 196 மதிப்பெண்கள் வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.