புதுதில்லி;
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதன் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வெள்ளிக்கிழமையன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

வியாழனன்று வர்த்தக நேர முடிவில், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு, ரூ. 69.05-ஆக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று வர்த்தக நேர துவக்கத்ல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 7 காசுகள் குறைந்து ரூ.69.12 ஆனது.ஜூன் 28-ஆம் தேதிதான் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 69 ரூபாய் 10 காசுகளாக வீழ்ச்சி கண்டது. தற்போது அதைவிடவும் மோசமான முறையில் சரிவைச் சந்தித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.