தீக்கதிர்

திருவள்ளூர் ரயில் நிலைய மின்னனு தகவல் பலகையில் அறிவிப்பு இல்லை

திருவள்ளூர்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இவைகள் அனைத்திலும் மின்னனு தகவல் அறிவிப்பு பலகைகள் உள்ளன. அந்த அறிவிப்பு பலகைகளில், ரயில்கள் வருகைமற்றும் புறப்பாடு குறித்த தகவல்களை பயணிகளுக்கு அறிவிப்பது வழக்கம்.

ஆனால் தற்சமயம் திருவள்ளூரில் உள்ள இந்த மின்னனு தகவல் பலகைகளில் உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்,உங்களை ரயில்வே நிர்வாகம் வரவேற்கிறது என்று மக்களுக்கு எந்த பயனும் இல்லாத விளம்பரங்கள் தான் பளிச்சிடுகின்றன. இங்குள்ள படத்தில் பிளாட்பாரத்தில் மின்சார ரயில் ஒன்று நிற்கிறது. அங்குள்ள மின்னனு பலகையில், உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் என்று மிளிருவதை காணலாம். எனவே பயணிகளுக்கு பயன்படும் விதத்தில் அறிவிப்புகளை மின்னனு பலகையில் தெரிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் மொழியில் ரயில் வருகை புறப்பாடுகுறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.