டெஹ்ரான்:                                                                                                                                                                              ஈரானுக்கும் அமெரிக்காவுக் கும் இடையில் உறவுகளில் கடும்
விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பி டம் இருந்து வந்த எட்டு தொலை பேசி அழைப்புகளை ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி நிராகரித்
தார் என்ற தகவல் தெரியவந்துள் ளது. இத்தகவலை ஈரான் ஜனாதிபதியின் உதவியாளர் மஹ்மூத் வாஸி தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டை டிரம்ப் நிர்வாகம் முறித்துக் கொண்ட நிலையில், இதுதொடர் பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற நோக்கத்தில் டிரம்ப் தொடர்புகொள்ள முயற்சி செய்தும் ஈரான் அரசு அதை நிராகரித்துவிட்டது. கடந்தஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க வரும்போது வாஷிங்டனுக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் ரவ்ஹானி நிராகரித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.