புதுதில்லி,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜியின் பெயர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான வி.கே தஹில் ரமணியை பதவி உயர்வுடன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. அவர் கடந்த 2001ம் ஆண்டு முதல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: